Home நாடு ஆர்கிம் ஹார்மோனி: 8 கடத்தல்காரர்களையும் நாடுகடத்த மலேசியா கோரிக்கை – சாஹிட்

ஆர்கிம் ஹார்மோனி: 8 கடத்தல்காரர்களையும் நாடுகடத்த மலேசியா கோரிக்கை – சாஹிட்

735
0
SHARE
Ad

zahidhamidicitizen1606பாகான் டத்தோ, ஜூன் 22 – மலேசிய எண்ணெய்க் கப்பலான எம்டி ஆர்கிம் ஹார்மோனியைக் கடத்திய 8 இந்தோனேசியர்களும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து மலேசியக் கடலோரக் காவல்படையின் துணைப் பொது இயக்குநர் டத்தோ அகமட் புழி அபு கஹார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் இந்தோனேசியர்கள். அவர்களைத் தப்பிச் செல்லும் வழியில் வியட்நாம் அதிகாரிகள் கைது செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் கப்பலை வியட்நாம் அருகே கடலோரக் காவல்படை சுற்றி வளைத்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த வேளையில், அவர்கள் 8 பேரும் வியாழக்கிழமை படகுகள் மூலம் தப்பிச் சென்றனர்.

#TamilSchoolmychoice

அவர்கள் தப்பிச் சென்ற விவரம், அதற்கு மறுநாள் கப்பல் கேப்டன் மூலமாக அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

tanker_shipp

கப்பல் கேப்டனின் குடும்பத்தினருக்குத் தீங்கு விளைவித்துவிடுவோம் என்று கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்ததால், அவர்கள் தப்பிச் சென்ற விவரத்தைத் தாமதமாக கேப்டன் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடத்தல்காரர்கள் 8 பேரையும் நாடுகடத்த மலேசியா கோரிக்கை விடுக்கும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார்.

நாடு கடத்தும் கோரிக்கை இந்தோனேசியாவிற்கும், வியட்நாமிற்கும் நாளை செவ்வாய்கிழமைக்குள் செய்யப்பட்டு விடும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.