Home இந்தியா மும்பையில் விஷச் சாராயம் குடித்து 33 பேர் பலி – 9 பேர் கவலைக்கிடம்!

மும்பையில் விஷச் சாராயம் குடித்து 33 பேர் பலி – 9 பேர் கவலைக்கிடம்!

843
0
SHARE
Ad

up deathமும்பை, ஜூன் 19 – மும்பையில் விஷச் சாராயம் குடித்து 33 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மும்பை மால்வானி பகுதியில் ரத்தோடி கிராமத்தில் நேற்று முன்தினம் விஷச் சாராயம் அருந்தியவர்களில் பலருக்கு நேற்று காலை முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

பலருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மேலும் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அத்துடன் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான ராஜு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது? அதை எத்தனை பேர் குடித்தனர்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.