Home கலை உலகம் நடிகை சினேகாவுக்குச் சென்னை நட்சத்திரத் தங்கும் விடுதியில் வளைகாப்பு முடிந்தது!

நடிகை சினேகாவுக்குச் சென்னை நட்சத்திரத் தங்கும் விடுதியில் வளைகாப்பு முடிந்தது!

1068
0
SHARE
Ad

actress_sneha_seemantham_photosசென்னை, ஜூன் 19 – நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

கடந்த 2012-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் சினேகாவும், பிரசன்னாவும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

சினேகா இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.  7 மாதக் கர்ப்பிணியான சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திரத் தங்கும் விடுதியில் வளைகாப்பு நடந்தது.

#TamilSchoolmychoice

sneha_baby_shower_photosசினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், வளைகாப்பில் கலந்துகொண்டார்கள்.

நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், இயக்குநர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்புக்கு வந்து சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.