Home கலை உலகம் சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே! – கமல் பேட்டி (காணொளியுடன்)!

சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே! – கமல் பேட்டி (காணொளியுடன்)!

565
0
SHARE
Ad

papanasam_pm036சென்னை, ஜூன் 19 – சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே என, நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசியுள்ளார் கமல்ஹாஸன்.

கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்’. இதில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். மலையாளத்தில் பெரிய வெற்றியடைந்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் மறுபதிப்பகம்தான் இந்தப் பாபநாசம்.

papanasam_pm037மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்தான் தமிழிலும் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் நடைபெற்றது. இதில் கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில்,

papanasam_pm016“பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்”.

“ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேனே என்று வருத்தமாக இருந்தது,” என்றார் கமல். மேடையில் இருந்த கவுதமி, இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தாராம்.