Home உலகம் அமெரிக்காவில் 2015-ன் சிறந்த தந்தையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்வு!

அமெரிக்காவில் 2015-ன் சிறந்த தந்தையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்வு!

638
0
SHARE
Ad

George W. Bush, Barbara Bushநியூயார்க், ஜூன் 19 – ஜூன் 21-ஆம் தேதி அனைத்துலக அளவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டுச் சிறந்த தந்தை யார் என்பது குறித்து அமெரிக்க தந்தையர்க் கூட்டமைப்பு, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்று, முன்னாள் அதிபரான ஜார்ஜ் வில்லியம் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, நியூயார்க்கில் நேற்று நடத்தப்பட்ட விழாவில் விருது வழங்கிக் கௌரவம் செய்யப்பட்டது.

சிறந்த தந்தை விருதை அவரது மகளான பார்பரா வழங்க, அதனை ஜார்ஜ் புஷ் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய ஜார்ஷ் புஷ், குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலையாகி, உண்மையான அன்பை மகளிடம் இருந்து பெற்றுள்ளதாகக் கூறினார். சிறந்த தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷிற்கு, வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.