Home கலை உலகம் விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!

விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!

542
0
SHARE
Ad

aniசென்னை, ஜூன் 19- விவேக் கதாநாயகனாக நடித்த படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் விவேக் ஒரு பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார். “உச்சி மேல உச்சி மேல ஏறப் போறேன்; லட்சத்துல கோடியில நீந்தப் போறேன் ” என்ற பாடலை விவேக் எழுதியுள்ளார்.

இந்தப் பாடலை அனிருத் பாடியிருப்பது இதன் சிறப்பாகும். முன்னணிக் கதாநாயகர்களின் படத்திற்கு  இசையமைக்கும் அளவிற்குப் பரபரப்பாக இயங்கி  வரும் அனிருத், பிற இசை அமைப்பாளர்களின் இசையில் பாடவும் தொடங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

‘ஐ’ படத்தின் ‘மெர்சலாயிட்டேன்’ பாட்டு அவரை இளம் வயதினர் மத்தியில் பெரிய பாடகராகவும் பிரபலமாக்கிவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நட்புக்காகப் பிறரது இசையிலும் பாடி வருகிறார். இது ஓர் ஆரோக்கியமான செயல் என்று திரையுலகினர் அவரைப் பாராட்டியுள்ளனர்.