Home தொழில் நுட்பம் 2016-ல் கூடுதல் திறன்களுடன் ஆப்பிள் வாட்ச் 2 வெளியாகலாம்!

2016-ல் கூடுதல் திறன்களுடன் ஆப்பிள் வாட்ச் 2 வெளியாகலாம்!

692
0
SHARE
Ad

appleகோலாலம்பூர், ஜூன் 19 – ஆப்பிள் வாட்ச்சின் அடுத்த பதிப்பு 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று ஆருடங்கள் கூறப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆப்பிள் வாட்ச்சின் அடுத்த பதிப்புகள் பற்றி இப்போதே பேச்சுக்களும் ஆருடங்களும் வெளியாகத் தொடங்கி விட்டன. கைக்கடிகாரங்களில் திறன்பேசிகளுக்கு சமமான தொழில்நுட்பங்களை ஆப்பிளுக்கு முன்பே புகுத்தி அதனைப் பல்வேறு நிறுவனங்கள் வர்த்தகப்படுத்த முயன்று தோற்றுப் போயின.

எனினும், அந்நிறுவனங்களுக்குச் சவால் அளிக்கும் விதமாக ஆப்பிள் உருவாக்கிய இந்த ஆப்பிள் வாட்ச், வர்த்தகத்தில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. திறன்பேசிகளுக்கு வரும் எல்லா விதமான அறிவிப்புகளையும், குறுந்தகவல்களையும் இந்தக் கைக்கடிகாரம் காட்டுவதோடு மட்டுமல்லாமல் கார் சாவியாகவும், உடல் நலனைக் கண்காணிக்கும் கருவியாகவும் இன்ன பிற கூடுதல் வசதிகளையும் கொண்டு இருந்ததால் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக மாறிப் போனது.

#TamilSchoolmychoice

இந்நிலைகையில், இந்த ஆப்பிள் வாட்ச்சில் கேமரா, ஐபோன்களின் இணைப்பு இல்லாமல் தன்னிச்சையாக இயங்குதல், காணொளி அழைப்புகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இடம் பெற்றால் எப்படி இருக்கும். அப்படி ஒரு எண்ணத்தில் தான் ஆப்பிள், தனது திறன் கடிகாரத்தின் அடுத்த பதிப்பினை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்றால் ஆப்பிள் இதனை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்றே தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறுகின்றனர்.