Home கலை உலகம் திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சிவக்குமார் – டுவிட்டரில் சூர்யா நெகிழ்ச்சி!

திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சிவக்குமார் – டுவிட்டரில் சூர்யா நெகிழ்ச்சி!

714
0
SHARE
Ad

SURIYA-KARTHI-SIVAKUMARசென்னை, ஜூன் 19 – தமிழ்ச் சினிமாவின் ‘மார்க்கண்டேய’ நடிகரான சிவக்குமார்,  திரை உலகிற்குள் அடியெடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகளாகி உள்ள நிலையில், தனது தந்தைக்கு டுவிட்டர் மூலம் நடிகர் சூர்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், “அன்புள்ள அப்பா, திரை உலகில் உங்களது 50 ஆண்டு பயணத்தைக் கடந்துவிட்டீர்கள். இந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ பாடங்கள் மற்றும் அனுபவங்களைச் சந்தித்துள்ளீர்கள். நானும், கார்த்தியும் நடிப்பிலும் மனிதநேயத்திலும் உங்களை முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றி நடக்கிறோம். உங்களை எனது அப்பா என்று கூறிக்கொள்வதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1965-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்த காக்கும்கரங்கள் படம் மூலம் தான் நடிகர் சிவகுமார் தமிழ்ச் சினிமாவிற்குள் முதல் முறையாக நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice