Home நாடு ஆர்கின் ஹார்மோனி: 22 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்பு! கடத்தல்காரர்கள் கைது!

ஆர்கின் ஹார்மோனி: 22 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்பு! கடத்தல்காரர்கள் கைது!

764
0
SHARE
Ad

Orkimகோலாலம்பூர், ஜூன் 19 – எம்டி ஆர்கின் ஹார்மோனி கப்பலில் இருந்து 22 பணியாளர்களை மீட்டுள்ள மலேசிய கடலோரக் காவல்படை, அதில் இருந்த 8 இந்தோனேசிய கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

இது குறித்து கப்பல் படைத்தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் ஜாபர் கூறுகையில், “தோ சு தீவு அருகே இன்று காலை 6.30 மணியளவில் பிடிக்கப்பட்டனர். பாதுகாப்புக் கவசங்களுடன் கடலில் குத்தித் தப்பிய அவர்கள் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

கப்பல் பணியாளர்கள் 22 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை அறிந்து பிரதமர் நஜிப் துன் ரசாக் நிம்மதியடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice