“போர்கள், உள்நாட்டுக் கலவரம் உள்ளிட்ட காரணங்களால் அகதிகளின் எண்ணிக்கை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகம் முழுவதும் சுமார் 6 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர்”.
“கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் 83 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். உலகம் முழுவதும் 122 பேரில் ஒருவர் அகதியாக உள்ளார்”.
“இவ்வாறு உலகெங்கும் அகதிகளாக உள்ளவர்கள் ஒரு நாட்டில் இருந்தால், அது மக்கள் தொகையில் உலகின் 24-வது மிகப் பெரிய நாடாக இருக்கும்”.
“உலகெங்கும் உள்ள 1.95 கோடி அகதிகளில் 51 லட்சம் பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்த நிலையில் சோமாலியா, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்” என்று ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இறுதிவரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் 10,433 பேர் அகதிகளாகவும், 16,709 பேர் அடைக்கலம் கோரியும் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் அகதிகளாக இருப்பதற்காக 1,99,937 பேரும், 5,074 பேர் அடைக்கலம் கோரியும் விண்ணப்பித்துள்ளனர்.