Home உலகம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்!

607
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 21 – எஸ்.கியு 425 என்ற வழித் தட எண்ணைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறினால், சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

Singapore_Airlines_Boeing_777-200

 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கோப்பு படம் 

#TamilSchoolmychoice

போயிங் 777-200 ரக இந்த விமானம் இன்று காலை 8.44 மணியளவில் மும்பாய் நகரைவிட்டுப் புறப்பட்டதாகவும், சிங்கப்பூரில் பிற்பகல் 4.44 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது என்றும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் பேச்சாளர் ஒருவர் கூறினார். இருப்பினும் 4.05க்கு இந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது என்றும் பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர், யாருக்கும் காயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசம்பாவிதத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.