புதுடில்லி, ஜூன் 22- பாகிஸ்தானியப் பெண்ணான சனம் சயீத், பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான ‘ஜிந்தகி குல்ஸார் ஹை’-ல் தோன்றிப் பிரபலமானவர்.
இவர் பாகிஸ்தான் திரைப்படம் ஒன்றில் இந்தியப் பெண்ணாக நடிக்கிறார்.
நசீர்கான் என்பவர் இயக்கும்’ பச்சானா’ என்னும் படத்தில் அழகான துறு துறுவென்ற இந்தியப் பெண்ணாக நடிக்கிறார்.
எதிர்பாராத -தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர் கொள்ளும் அந்தப் பெண், முன்பின் அறியாத ஒரு நபரை நம்பி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அந்த ஆள் மொரீஷியஸ் நாட்டில் வாடகை வண்டி(taxi) ஓட்டும் ஒரு பாகிஸ்தானியன்.
அந்த வித்தியாசமான இணையின் சாகசமும் காதலும் படத்தைச் சுவையானதாக நகர்த்திச் செல்லும் என்கிறார் இயக்குநர்.
ஒரே நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இரண்டிலும் வெளியாகிறது இந்தப்படம்.
‘பச்சானா’ படத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, தான் முயல்வதாகக் கூறுகிறார் சனம் சயீத்!