Home இந்தியா அம்மா வருகையால் அல்லோலகல்லோலப்படும் ஆர்.கே.நகர் தொகுதி!

அம்மா வருகையால் அல்லோலகல்லோலப்படும் ஆர்.கே.நகர் தொகுதி!

500
0
SHARE
Ad

22-1434970703-admk-011-600சென்னை, ஜூன் 22- ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா இன்று சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அத்தொகுதியே விழாக்கோலம் பூண்டு ‘ஜே ஜே’- வெனக் காட்சி தருகிறது.

போயஸ்கார்டனில் இருந்து மாலையில் கிளம்பும் அவர் எம்.ஜி.ஆர். சிலை – பெட்ரோல் நிலையம் அருகிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

அதிமுக தொண்டர்கள் பலரும் ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்துக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கிடக்கின்றனர்.