Home கலை உலகம் விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறினார் டிடி!

விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறினார் டிடி!

573
0
SHARE
Ad

30-1401429699-dd-600-jpgசென்னை, ஜூன் 22- ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு.

காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தனக்கே உரிய கலகலப்பான பாணியில் தொகுத்து வழங்கிய டிடி, தனது பணியிலிருந்து விலகிவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், அவராகப் பணியிலிருந்து விலகவில்லை; விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அவரை வெளியேற்றிவிட்டது என்கின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய டிடி, வளவளவென்று பேசியதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்ததாகக் குறை கூறப்பட்டது. இதற்காக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஒருவேளை, இதன் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டாரா?

ஆனால், டிடி கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே வேலையை விட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.