Home உலகம் பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அளித்த கொடூர தண்டனைகள்! (காணொளியுடன்)

பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அளித்த கொடூர தண்டனைகள்! (காணொளியுடன்)

834
0
SHARE
Ad

isis_kodumai_04ஈராக், ஜூன் 24 – ஐஎஸ் அமைப்பினர் தங்களின் பிணைக்கைதிகளைக் கொடூரமாகக் கொல்லும் புதிய காணொளி மற்றும் படங்களை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ் இயக்கத்தினர், தங்களிடம் உள்ள பிணைக்கதிகளைக் கொல்லும் காணொளி மற்றும் படங்களை அவ்வப்போது வெளியிட்டுப் பரபரப்பை எற்படுத்தி வருகின்றனர்.

isis_kodumai_05இந்நிலையில், தங்கள் பிடியில் இருந்த 16 கைதிகளைக் கொடுரமான முறையில் கொலை செய்த காணொளி மற்றும் படங்களை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்தக் காணொளியில் பிணைக்கைதிகளில் சிலரை ஒரு காரில் அடைத்து வைக்கின்றனர். பின்னர் சில அடிகள் தூரத்தில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தன்னிடம் இருக்கும் ரசாயன துப்பாக்கி மூலம் சுட்டுக் காரை வெடிக்கச் செய்கிறார்.

isis_kodumai_06அடுத்ததாக ஐந்து கைதிகளை ஒரு கூண்டினுள் அடைத்துவைக்கின்றனர். பின்னர் அந்தக் கூண்டை அப்படியே தண்ணீரினுள் இறக்குகின்றனர். சில நிமிடங்களுக்குப் பின்னர் அந்தக் கூண்டை வெளியே எடுக்கும்போது அதில் இருந்த கைதிகள் அனைவரும் இறந்து கிடக்கின்றனர்.

isis_kodumai_01முடிவில் 7 கைதிகளை வரிசையாக முட்டி போட வைக்கின்றனர். பின்னர் அவர்களின் கழுத்தில் வெடிகுண்டுகளை ஒருவர் கட்டுகிறார்.

isis_kodumai_02சில வினாடிகள் கழித்து அதை வெடிக்கச் செய்கிறார். அவர்களின் உடல்கள் வெடித்துச் சிதறுவதாக அந்தக் காணொளி முடிகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்தக் காணொளி ஈராக்கின் மொசூல் பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

isis_kodumai_07எனினும் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கவே இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

https://youtu.be/UOYrUnlTsnI