தொடக்க விழா நடக்கும் இடம்: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ‘கேரளா இல்லம்’ என்கிற படப்பிடிப்புத்தளம்.
விஜய் படத்தின் தொடக்க விழா என்பதே சிறப்புத் தான்! அந்தச் சிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக, இந்தப்படத் தொடக்க விழாவுக்கு ரஜினிகாந்த் வருகிறார்.
ரஜினிக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
சம்பந்தம் இருக்கிறது! அட்டைக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் கலைப்புலி தாணு தான், இந்த விஜய் படத்தையும் தயாரிக்கிறார்.
தாணுவின் அழைப்பை ஏற்றே ரஜினிகாந்த், விஜய் படத்தின் தொடக்க விழாவிற்கு வர ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
இயக்குநர் அட்லியின் முதல் படமான ராஜாராணி படத் தொடக்க விழாவிற்குக் கமல் வந்து வாழ்த்துத் தெரிவித்தார். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அதுபோல், இந்தப் படத்துக்கு ரஜினிகாந்த் வந்து வாழ்த்தப் போகிறார். இந்தப் படம் அதைவிட மிகப்பெரிய வெற்றியடையும் என்று மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் அட்லி.