Home நாடு பழனிவேல் இனி மஇகா உறுப்பினர் இல்லை-சுப்ரா இடைக்காலத் தலைவர் – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு!

பழனிவேல் இனி மஇகா உறுப்பினர் இல்லை-சுப்ரா இடைக்காலத் தலைவர் – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு!

870
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 25 – நான் இன்னும் மஇகா தேசியத் தலைவர்தான் என்ற அறிவிப்போடு, இன்று புத்ரா ஜெயாவில் 2009 மத்திய செயலவைக்கான கூட்டத்தைக் கூட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் முற்பட்டிருக்கும் வேளையில், பழனிவேல் மஇகா சட்டவிதி 91இன்படி இனி மஇகா உறுப்பினர் அல்ல என சங்கப் பதிவிலாகா உறுதி செய்துள்ளதாக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

Datuk-Seri-Dr-S.Subramaniamஇன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில், சுப்ரா இதனைத் தெரிவித்தார்.

பழனிவேல் இனி மஇகா உறுப்பினர் அல்ல என்ற முடிவை சங்கப் பதிவிலாகா எடுத்திருப்பதை அடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக டாக்டர் சுப்ரா செயல்பட்டு 2009 மத்திய செயலவையை இனி வழிநடத்துவார் என்றும் சங்கப் பதிவிலாகா உறுதிப்படுத்தி கடிதம் வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice