Home இந்தியா பாஜக-வின் மூத்த தலைவர்கள் மூளைச்சாவு அடைந்தவர்களா? மோடிமீது யஷ்வந்த் சின்கா தாக்கு!  

பாஜக-வின் மூத்த தலைவர்கள் மூளைச்சாவு அடைந்தவர்களா? மோடிமீது யஷ்வந்த் சின்கா தாக்கு!  

673
0
SHARE
Ad

yashமும்பை,ஜூன் 25- பாஜக-வில் 75 வயதைக் கடந்த மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும், அவர்களை மூளைச்சாவு அடைந்தவர்களாகத் தற்போதைய தலைமை கருதுவதாகவும், பிரதமர் மோடியைப் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவிடம்,”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்கும், இப்போதைய பிரதமர் மோடி ஆட்சிக்கும் இடையேயான வேறுபாடு யாது? மூத்த தலைவர்களிடம் இருந்து மோடி அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?” எனக் கேட்டதற்கு, அவர் அளித்த பதிலாவது: .

‘‘பா.ஜனதா கட்சியில் 75 வயதைக் கடந்த அனைத்துத் தலைவர்களும், கடந்த 2014–ம் ஆண்டு மே 26–ந் தேதி முதல்- அதாவது- மோடி பிரதமராகப் பதவி ஏற்ற தினம் முதல்  மூளைச்சாவு அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அந்த மூளைச்சாவு அடைந்தவர்கள் வரிசையில் நானும் இடம் பெற்றிருக்கிறேன்” என்றார்.

#TamilSchoolmychoice

“அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த அரசு ஆக்கப்பூர்வமான பணிகளை நிறைவேற்றவேண்டும். இதற்காக எதிர்க்கட்சிகளுடன் அமர்ந்து கூட்டத்தொடரைச் சுமூகமாக நடத்துவதற்கான ஆலோசனையில் இந்த அரசு ஈடுபட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

82 வயதான யஷ்வந்த் சின்கா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் பின்னர், அவருக்குக் கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி  உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. அவர்கள் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாலேயே யஷ்வந்த் சின்கா இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.