Home கலை உலகம் 3 கி.மீ. தூரம் சாலை அமைத்துக் கொடுத்த விஜய்!

3 கி.மீ. தூரம் சாலை அமைத்துக் கொடுத்த விஜய்!

626
0
SHARE
Ad

tamilagam360.com-PULI3சென்னை, ஜூன் 26- ஆந்திரப் பிரதேசம்  தலக்கோணம் காட்டுக்குள் இருக்கும் நரபேலி என்னும் குக்கிராமத்தில், விஜய் நடிக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

கட்டத்தட்ட 40 நாட்கள் அந்தக் குக்கிராமத்திலேயே ஒரு சாதாரண வீட்டில் தங்கி, படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய்.

vijayஅந்தக் கிராமத்திற்குச் சரியான சாலை வசதி இல்லை என்பதால்,தயாரிப்பாளருடன் சேர்ந்து விஜய், முக்கியச் சாலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்குத் தார்ச் சாலை அமைத்துக் கொடுத்து, அவ்வூர் மக்கள் மீது தான்  வைத்திருக்கும் பாசத்தைக் காட்டினார்.

#TamilSchoolmychoice

இதை எதிர்பாராத நரபேலி கிராம மக்கள், மிகவும் மனமகிழ்ந்து விஜய்க்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.