Home கலை உலகம் டுவிட்டரில் 2 மில்லியன் இரசிகர்களைப் பெற்றார் ரஜினிகாந்த்!

டுவிட்டரில் 2 மில்லியன் இரசிகர்களைப் பெற்றார் ரஜினிகாந்த்!

441
0
SHARE
Ad

rajini43-600சென்னை, ஜூன் 26 – ரஜினிக்கு இரசிகர்கள் எவ்வளவு பேர் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. இந்தியாவின் ‘சுப்பர் ஸ்டார்’ ஷாருக்கான் போன்ற பெரிய நடிகர்கள் கூட ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது ரஜினிகாந்தின் டுவிட்டர் பக்கத்தை 2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.  2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கைத் துவக்கினார்.

ஆரம்பித்துச் சில நாட்களிலேயே அதிக அளவில் ரசிகர்கள் பின் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. மிக அரிதாக டுவிட்டரைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர் ரஜினிகாந்த். இரண்டு வருடத்தில் 12 டுவீட்களை மட்டுமே இதுவரை டுவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் டுவிட்டரில் அதிக ரசிகர்கள் கொண்ட தமிழ் சினிமா நடிகராக ரஜினிகாந்த் மாறியுள்ளார். இவரைத் தொடர்ந்து தனுஷ் 1.75 மில்லியன் ரசிர்களுடன் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாயகிகளில் ஸ்ருதி ஹாசன் 2.75 மில்லியன் ரசிகர்களுடன் முதல் இடத்திலும், திரிஷா 1.8 மில்லியனுடன் இரண்டாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.