Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தலை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நடிகர் சங்கத் தேர்தலை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

530
0
SHARE
Ad

vishal_in_pandianadu_stills-8சென்னை, ஜூன் 26- நடிகர் விஷால் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்கத் தேர்தலை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்த  உயர்நீதிமன்றம் தடை விதித்து அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம்,தீர்ப்பைத்  தள்ளிவைப்பதாக நேற்று மாலை செய்தி வெளியானது.மேலும், இன்று நடைபெறவுள்ள வேட்பு மனுத் தாக்கலுக்கும் தடை விதிக்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை, நடிகர் சங்கத் தேர்தலை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த உத்தரவு விஷால் அணியினரை உற்சாகமடைய வைத்துள்ளது. வெற்றிக் காற்று அவர்கள் பக்கம் வீசுவதற்கான அறிகுறி இது என்பதாக அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.