Home உலகம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டி!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டி!

473
0
SHARE
Ad

raja_1914283gகொழும்பு, ஜூன் 26 – இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இவரது அரசில் அமைச்சராக இருந்த மைத்திரிபாலா சிரிசேனா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே தற்போது அரசியலில் தீவிரம் காட்டாமல் உள்ளார். அவரது மனைவி, மகன் மற்றும் தம்பிகள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

எனவே அரசியலில் மீண்டும் அதிகாரம் மிக்க இடத்தைப் பிடிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். அதற்காக வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அதிபர் மைத்ரிபாலாவும், மகிந்த ராஜபக்சேவும் இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள்.

#TamilSchoolmychoice

தற்போது எதிரும், புதிருமாக இவர்கள் இருவரையும் சமரசம் செய்து இணைக்கும் நோக்கத்தில் சுதந்திரா கட்சி 6 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இக்குழு அதிபர் மைத்ரிபாலாவைச் சந்தித்தது.

அதைத் தொடர்ந்து 6 பேர் குழு ராஜபக்சேவைச் சந்தித்தது. அப்போது அவர்களிடம், “இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இலங்கை சுதந்திரா கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியின் சார்பில் போட்டியிடவே விரும்புகிறேன்”.

‘‘பிரதமர் பதவி வேண்டும் என ஒரு போதும் நான் கேட்கவில்லை. எனக்குத் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் கிடையாது. எனது எதிர்காலத்தை மக்களிடம் ஒப்படைக்கிறேன். நான் அனைத்துப் பதவிகளையும் விட்டு விலகி இருக்கிறேன். கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் முயலவில்லை’’ என்றார் ராஜபக்சே.