Home நாடு உடைக்காகப் பயணியைத் தடுத்து நிறுத்திய கேஎல்ஐஏ அதிகாரிகள் – மன்னிப்புக் கோரியது நிர்வாகம்!

உடைக்காகப் பயணியைத் தடுத்து நிறுத்திய கேஎல்ஐஏ அதிகாரிகள் – மன்னிப்புக் கோரியது நிர்வாகம்!

1056
0
SHARE
Ad

baggagekliaபெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 – பயணி ஒருவர் தான் மறந்து விட்டுச் சென்ற உடைமைகளை எடுப்பதற்கு முட்டி தெரியும் அளவிற்குக் காற்சட்டை அணிந்து வந்ததால், கேஎல்ஐஏ அதிகாரிகள் அவரை உடைமைகள் எடுக்கும் பிரிவிற்கு அனுமதிக்க மறுத்த விவகாரம் தற்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், விமான நிலைய நிர்வாகம் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

கடந்த மே மாதம், ஸ்டீவன் நாக் என்ற பயணி தனது தைப்பே பயணத்தின் போது தான் விட்டுச் சென்ற உடைமைகளை எடுப்பதற்காக கேஎல்ஐஏ வின் உடைமைகள் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அதிகாரிகள் அவரது உடை குறித்து விமர்சனம் செய்தும், முழுக் காற்சட்டையும், ஷூவும் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணி தனது உடைமைகளை எடுக்காமலே திரும்பிச் சென்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கேஎல்ஐஏ நிர்வாகம்  தற்போது அந்தப் பயணியிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அலுவலகப் பணிகளுக்கே தங்கள் நிர்வாகம் உடைகள் குறித்து விதிமுறைகள் விதித்து இருந்ததாகவும், அதிகாரிகள் தவறான புரிதல்களினால் பயணியைத் தடுத்து நிறுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் மன உளைச்சலுக்கு ஆளான பயணியிடம் தாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.