மனப்பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும்.
தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கல் உப்பு, 2 கிராப்பை எடுத்துச் சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொண்டால் தலைவலியின் கடுமை குறையும். ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.
சந்தனக்கட்டையைச் சிறிது தண்ணீர் விட்டுப் பசை போல் அரைத்து அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவதிப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.