Home நாடு பார்க்காத ஒருவருக்காக 75000 ரிங்கிட்டை இழந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை!

பார்க்காத ஒருவருக்காக 75000 ரிங்கிட்டை இழந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை!

597
0
SHARE
Ad

LLP_1554கோலாலம்பூர், ஜூன் 27 – சமூக ஊடகங்களில் மட்டுமே பழக்கமான ஒருவருக்காக மூன்று மாதத்தில் 75000 ரிங்கிட் கொடுத்து, கடன் தொல்லையால் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட உருக்கமான சம்பவம் ஸ்ரீகம்பாங்கன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லியூ வேய் ஈ என்ற பயிற்சி வகுப்பு ஆசிரியை, கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரீ கம்பாங்கனின் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்தும் பகுதியில் இறந்து கிடந்தார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பார்க்காத ஒருவருக்காக 75000 ரிங்கிட்டை இழந்து, கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியையின் தங்கை வெளியிட்டுள்ள செய்தியில், “எனது சகோதரி, அஸ்லம் ரோஜர் லோரிஸ் முஸ்தபா என்பவருடன் கடந்த மூன்று மாத காலமாக ‘விசேட்’ (WeChat) மற்றும் ‘வாட்ஸ்அப்’ (Whatsapp) போன்ற சமூக ஊடகங்களில் பழகி வந்தார்.”

#TamilSchoolmychoice

“இந்தச் சூழலில், அஸ்லம் ரோஜர் தனக்கு இதய நோய் உள்ளதாகவும், சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்குப் பல்லாயிரம் ரிங்கிட் செலவாகும் என்றும் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய எனது சகோதரி, கடன் வாங்கி அவருக்கு 75000 ரிங்கிட்டை மூன்று மாதங்களில் கொடுத்துள்ளார். இறுதியில் அஸ்லாம் போலியானவர் என்பது தெரிந்தததும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், கடன் கொடுத்தவர்கள் வேறு அவருக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமூக ஊடகங்கள் மூலம் ஆசிரியை ஏமாற்றிய நபர் சுபாங் ஜெயாவைச் சேர்ந்தவர் எனக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.