ஜோகூர்பாரு, ஜூன் 28 – மஇகாவின் உறுப்பியத்தை இழந்துள்ளதாக சங்கப் பதிவகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் ஜசெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்களை டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வெறும் ஆருடங்கள் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய ஆருடங்கள் எழுந்திருக்கக் கூடாது என்றார்.
மஇகாவின் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நினைப்பவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மிக விரைவில் அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல் இந்த விவகாரங்களை வைத்து ஆதாயம் காண்பவர்கள், நிலைமையை மேலும் மோசமாக்கிவிடுவர்,” என ஜோகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாரிர் மேலும் எச்சரித்துள்ளார்.
ஷாரிர் தேசிய முன்னணியின் அமைச்சுப் பொறுப்பு வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (Barisan Nasional Backbenchers Club) தலைவரும் ஆவார்.