Home நாடு முகமட் நிசார் பதவி விலக வேண்டும்: பேராக் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்து

முகமட் நிசார் பதவி விலக வேண்டும்: பேராக் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்து

655
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 28 – பேராக் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முகமட் நிசார் விலக வேண்டும் என ஈப்போ தீமோர் (கிழக்கு) தொகுதியின் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் சல்மா சாலே வலியுறுத்தியுள்ளார்.

Nizar-Jamaludin-1---Sliderஅண்மையக் காலமாக பாஸ் மற்றும் அக்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் மீது ஜசெக நடத்தி வரும் தாக்குதல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், முகமட் நிசார் பதவி விலக வேண்டும் என பாஸ் கட்சியின் பேரா மாநிலத் தலைமை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“பாஸ் மற்றும் ஜசெக இடையேயான உறவை வலுப்படுத்த முகமட் நிசாரை பதவியில் நீடிக்க விடுவது என்பது சரியான நடவடிக்கை அல்ல. பாஸ் கட்சியில் தற்போது நிசார் எத்தகைய பதவியும் வகிக்கவில்லை என்பதால் அவரது நிலை குறித்து பக்காத்தான் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அவரைப் பதவியில் நீடிக்கவிட்டால் ஜசெகவின் ஊதுகுழலாக பாஸ் செயல்படுகிறது என்று அம்னோ மற்றும் தேசிய முன்னணி தரப்பில் தொடர்ந்து விமர்சிக்கப்படும்,” என்று சல்மான் சாலே தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

PAS-Logo-Sliderபேரா சட்டமன்றத்தில் ஜசெகவிற்கு 18 உறுப்பினர்களும் பாஸ் மற்றும் பிகேஆருக்கு தலா 5 உறுப்பினர்களும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவராக பாஸ் கட்சியை சேர்ந்த ஒருவரே நீடிக்க வேண்டும் என ஜசெக விரும்பினால், முகமட் நசிருக்கு பதில் யார் அப்பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே சல்மா சாலேவின் இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமட் நசிர், இது சல்மாவின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக தாம் பதவியில் நீடிக்க ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.