Home நாடு பினாங்கில் இந்து கடவுள் சிலை அவமதிப்பு

பினாங்கில் இந்து கடவுள் சிலை அவமதிப்பு

1724
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன், ஜூன் 27 -பினாங்கு, ஜாலான் மஸ்ஜித் கபிடான் கெலிங்கில் இந்து கோவிலை அவமதிக்கும் செயல் நடந்துள்ளதாக ‘த ஸ்டார் ஆன்லைன்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமையன்று அக்கோவிலில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பலகை மீது மீது மலக்கழிவு பூசப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

Vinayagar Statue

#TamilSchoolmychoice

விநாயகர் சிலை – கோப்புப் படம்

சனிக்கிழமை காலை 7 மணியளவில் அந்தப் பிளாஸ்டிக் பலகையின் மீது தாம் மலக்கழிவைக் கண்டதாக, அதன் அருகே பூக்கள் விற்று வரும் பி.குணநாதன் (39 வயது) என்பவர் கூறியுள்ளார்.

“இது தொடர்பாக கோவில் பூசாரி, பட்டாணி சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற 20 சம்பவங்கள் நடந்துள்ளன,” என்கிறார் குணநாதன்.

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பதை ஜோர்ஜ்டவுன் காவல்துறைை உதவி ஆணையர் மியோர் ஃபரிடாலாத்ராஷ் வாஹிட் (Mior Faridalathrash Wahid) உறுதி செய்துள்ளார்.

“கோவிலுக்கு அருகே சிற்றுண்டி கடைகளை வைத்திருப்பவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். மேலும் சுற்றுப்புறங்களில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்வோம்,” என்றார் மியர்.