Home நாடு சங்கப்பதிவக முடிவைப் பழனிவேல் ஏற்க வேண்டும்: தெங்கு அட்னான்

சங்கப்பதிவக முடிவைப் பழனிவேல் ஏற்க வேண்டும்: தெங்கு அட்னான்

652
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 28 – மஇகா விவகாரம் தொடர்பில் சங்கப் பதிவகம் எடுத்துள்ள முடிவை டத்தோஸ்ரீ பழனிவேல் ஏற்க வேண்டும் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் (படம்) அறிவுறுத்தி உள்ளார்.

Tengku-adnan-featureநாட்டின் சட்ட திட்டங்களையும், மஇகா அரசியல் சாசனத்தையும் பழனிவேல் மதிக்க வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளரான அவர் வலியுறுத்தி உள்ளார்.

“மஇகா தலைவரான பழனிவேல் தன் கட்சியின் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட மறுத்தால், அடுத்து என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்குகி கொண்டு செல்லக் கூடாது என்றும், அவ்வாறு கொண்டு சென்றால் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் மஇகா அரசியல் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சங்கப் பதிவகத்தின் முடிவை ஏற்க வேண்டுமென அவருக்கு அறிவுறுத்துகிறேன்,” என்றார் தெங்கு அட்னான்.

#TamilSchoolmychoice

மஇகா அரசியல் சாசனத்தின் 91ஆவது பிரிவின்படி டத்தோ பழனிவேல் தனது கட்சி உறுப்பியத்தை இழந்துவிட்டதாகச் சங்கப் பதிவகம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. ஆனால் அதை ஏற்க முடியாது எனப் பழனிவேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் பழனிவேல் நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.