Home நாடு மஇகா நெருக்கடிக்குத் தீர்வு: கைகொடுக்கும் மூத்த தலைவர்கள்!

மஇகா நெருக்கடிக்குத் தீர்வு: கைகொடுக்கும் மூத்த தலைவர்கள்!

760
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 29 – மஇகாவில் தற்போது நிலவி வரும் தலைமைத்துவப் போராட்டத்திற்குத் தீர்வு காணும்படி அனுபவமிக்க மூத்த தலைவர்களை அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் உடனடியாக ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என மஇகா தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர், பினாங்கைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.விஜயநாதன் தெரிவித்துள்ளார்.

vadivelu-tansri

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ வடிவேலு

இது தொடர்பாக அனுபவமிக்க மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் மத்தியச் செயலவை உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் என விஜயநாதனும், மஇகா முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.வடிவேலுவும் வலியுறுத்தி உள்ளனர்.

மஇகா அரசியல் சாசனத்தை ஆராய்ந்து தெளிவுபெற இத்தகைய கூட்டம் நல்ல தளமாக அமையும் என வடிவேலு கூறியுள்ளார்.

அனுபவமிக்க மூத்த தலைவர்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல அனுபவம் இருக்கும் என்றும், எனவே தீர்வு காணப்பட முடியாத அளவிற்கு நடப்புச் சிக்கல்கள் வளரும் முன்னர், அத்தகைய தலைவர்களின் உதவியைப் பெற வேண்டும் என்றும் விஜயநாதன் கூறியுள்ளார்.