Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியர் வர்த்தக சபையின் தலைவராகக் கென்னத் ஈஸ்வரன் மீண்டும் தேர்வு!

இந்தியர் வர்த்தக சபையின் தலைவராகக் கென்னத் ஈஸ்வரன் மீண்டும் தேர்வு!

967
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 28 – நேற்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற மலேசிய இந்தியர் தொழிலியல் வர்த்தக சபையின் (மைக்கி-MAICCI) தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் (படம்) மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

kenneth-eswaranதலைவர் தேர்தலில் ஈஸ்வரன் 70 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பினாங்கு வணிகர் வசந்தராஜன் 56 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.

துணைத் தலைவராக மலாக்காவைச் சேர்ந்த டத்தோ ராஜசேகரன் 74 வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோலாலம்பூரைச் சேர்ந்த டத்தோஸ்ரீ பி.கிருஷ்ணமூர்த்தி 51 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

#TamilSchoolmychoice

2 உதவித் தலைவர்கள் பதவிகளுக்கு முறையே ஷாம் சுந்தர் (105 வாக்குகள்) மற்றும் சபாவைச் சேர்ந்த டத்தோ சோதி (71 வாக்குகள்) ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மைக்கியின் தலைமைச் செயலாளர் பதவிக்கு டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பகாங் மாநிலத்தின் டத்தோ தேவேந்திரன் 64 வாக்குகள் பெற்றுத் தோல்வி கண்டார். குமாரராஜா இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைச் செயலாளராகப் பி.முகுந்தன் 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீகாந்துக்கு 60 வாக்குகளே கிடைத்தன.

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட குமாரசாமி 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அம்பாங் டத்தோ முனியாண்டி 62 வாக்குகள் பெற்றுத் தோல்வி கண்டார்.

கடுமையான போட்டியில் கென்னத் ஈஸ்வரன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வசந்தராஜன் அணியினர் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியிருக்கின்றனர்.