Home அவசியம் படிக்க வேண்டியவை நடிகர் சிவகுமார் பேஸ்புக் தளத்திலிருந்து வெளியேறக் காரணமான கட்டுரை

நடிகர் சிவகுமார் பேஸ்புக் தளத்திலிருந்து வெளியேறக் காரணமான கட்டுரை

919
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 28 – பேஸ்புக் பக்கங்களில் தீவிரமாக இயங்கி வந்த நடிகர் சிவகுமார்  சென்ற வாரம் தீரன் சின்னமலை பற்றிய சில தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இதற்கு நிறைய பேர் பதில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்கள். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி சிவகுமார் உயர்வாகக் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.

SURIYA-KARTHI-SIVAKUMARசிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்திக்கையும் விமர்சித்திருந்தார்கள். இதனால் மிகவும் வருத்தம் கொண்ட சிவகுமார் ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவர் ஃபேஸ்புக்கை விட்டு விலகியதற்குக் காரணமாகப் பலரும் கருதுவது கீழ்வரும் இந்தக் கட்டுரையைத்தான். தீரன் சின்னமலை பற்றி சிவகுமார் எழுதியதாவது:

#TamilSchoolmychoice

வேலு நாச்சியார் பிறந்து 26 வருடம் கழித்து 1756-ல் கொங்கு மண்ணில் பிறந்தவர்- தீரன் சின்னமலை. இளம் வயதிலேயே கல்வி,கேள்வி – வில்,வாள், சிலம்பம், குதிரை ஏற்றத்தில் தேர்ச்சி….எல்லாச் சாதியினரும் கூட்டாளிகள்…..

மைசூர் திப்பு ஆட்கள் சேலம், தர்மபுரி, சங்ககிரி பகுதியில் கப்பம் வசூல்…

அவர்களைத் தடுத்து நிறுத்தி -வசூல் தொகையை வாங்கிக் கொண்டு-‘சிவன்மலை- சென்னிமலைக்கிடையே – சின்னமலை நான்’ என்று திப்புவிடம் சொல் என்றார்..பின் 10,000 வீரர்களுடன் மைசூர் சென்று, திப்புவுடன் கைகோர்த்து, பொது எதிரி வெள்ளையனோடு மோதினார்.

கள்ளிக்கோட்டையிலிருந்து 27,000 வீரர்களுடன் வந்து 2 மாதம் போரிட்ட ஜெனரல் ஹாரிஸ், திப்புவைக் கொன்று மைசூரைக் கைப்பற்றினான் . ஊர் திரும்பிய தீரன், ஓடாநிலையில் கோட்டை கட்டிப் படைபலம் பெருக்கினார்..புதிதாய் வந்த கர்னல் மேக்ஸ்வெல்-‘கொங்கு நாட்டை நீ வைத்துக்கொள் .

காவிரிக் கரையில், குதிரைப்படை நிறுத்த அனுமதி கொடு’ எனக் கேட்க தீரன் மறுத்தார்…1801 -ல் காவிரி ஆற்றுக்குள் மேக்ஸ்வெல் குதிரைப் படை.. சுழலுக்குள்ளும் பாறை இடுக்குகளிலும் குதிரைகள் சிக்கித் தத்தளிக்க – தீரன் அந்தக் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்…

1802 -ல் பழிவாங்க, ஓடாநிலை கோட்டையில் முற்றுகைப் போர்..தீரன் கையாள் கருப்பன் சேர்வை தலையை,மேக்ஸ்வெல்,வாள் பதம் பார்க்க,பாய்ந்து சென்ற தீரன், இளநி போல், கர்னல் தலையைச் சீவி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி – கட்டை வண்டியில் தலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்..

மைசூர், ஜென்ரல் ஹாரிஸ், இப்போது இங்கே…1804 – அரச்சலூர் அம்மன் திருவிழா..3000 வீரர்களுடன் ஹாரிஸ்…ஷூ காலில் கோயிலுள் சென்று தேரை உடைத்தான்… செய்தி எட்டிட ஒற்றை ஆளாக, எறிகுண்டுகளுடன் குதிரையில் வந்து, அத்தனை வீரர்களையும் எறிகுண்டால் தாக்கி,விரட்டினார் தீரன்.

அவமானப்பட்ட ஹாரிஸ் -சென்னையிலிருந்து 70 பீரங்கிகள்- கள்ளிக்கோட்டையிலிருந்து, யுத்த தளவாடங்களுடன் வந்து, அதிகாலை 4 மணிக்கே கோட்டையைத் தாக்கி உள்ளே நுழைந்தால்.! .ஈ காக்கை அங்கு இல்லை. அறுந்து போன செருப்புகளின் அடிப்பகுதியில் -மைசூரில் கைதாகி அப்ரூவரான,தீரனின் வலது கரம் வேலப்பன்- உளவாளியாக இருந்து- அவ்வப்போது கள்ளிக் கோட்டையிலிருந்து தீரனுக்கு ரகசியமாகச் செய்தி அனுப்பிய கடிதங்கள்.!! அடுத்த கணம், செருப்புத் தைத்த பொல்லான், ரகசியம் சொல்ல மறுக்க, கோட்டை மீது வைத்துச் சுட்டுக் கொன்றனர்…அடுத்து வேலப்பன் தலை தரையில் உருண்டது….

சின்னமலை எங்கே ? பழனி கருமலைப் பகுதியில் தலை மறைவு.அங்கே தேடுதல் வேட்டை.. திண்டுக்கல் ஷேக் ஹுசைன் வீட்டுத் திருமணத்திலும் மாறு வேடத்தில் தப்பி விட்டார்.. வெறிநாயைப் போல் வெள்ளையர் தேடல்.. காட்டுக்குள் ஒரு குடிசை!! நல்லான் சமையல். அவனை நம்பி, ஆயுதங்களை வாசலில் வைத்துவிட்டு சாப்பிட இலையில் உட்கார, 200 வீரர்கள் சுற்றி வளைத்து கைது.. துரோகி நல்லான் காட்டிக் கொடுத்துவிட்டான்.

1805 -ஜூலை 31-ந்தேதி சங்ககிரிக்கோட்டை உச்சியில், தம்பி கிலேதருடன், தீரன் சின்னமலை நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்!!