Home கலை உலகம் விஜயைப் புலி படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்த மகன்!

விஜயைப் புலி படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்த மகன்!

482
0
SHARE
Ad

29-1435577697-puli945சென்னை, ஜூன் 30- புலி படத்தில் நடிக்க, விஜய் ஒப்புக்கொண்டது குறித்துச் சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது, வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்குச் சரி வருமா என்கிற சந்தேகம் இருந்ததால், உடனே சம்மதம் சொல்லவில்லை. யோசித்துச் சொல்வதாகச் சொல்லிச் சிம்புதேவனை அனுப்பி வைத்துவிட்டார்.

ஏனென்றால், விஜய் இதுவரை தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமான பாத்திரத்தில் நடித்ததில்லை.அதனால் மிகவும் தயங்கினார்.

#TamilSchoolmychoice

ஆனால், விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவர் மகன் சஞ்சய்க்கு கதை மிகவும் பிடித்துப் போனது. “அப்பா! இது நீங்கள் பண்ண வேண்டிய படம். கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றியடையும்; அதுமட்டுமில்லாமல், இந்தப்படம் உங்களுக்குப் பெருமையைத் தேடித் தரும்” என்று உற்சாகமாகப் பேசியுள்ளான்.

மகன் இவ்வளவு நம்பிக்கையுடன் சொன்னது மட்டுமில்லாமல், இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை மனம் மாறச் செய்து, சிம்புதேவனுக்குச் சம்மதம் சொல்ல வைத்ததாம்.

‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் இணைந்து ஆடியுள்ளான் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது.