Home நாடு முதல் குப்பை ஒழிப்புக் குழுவை அறிமுகம் செய்தது ஜோகூர் பாரு!

முதல் குப்பை ஒழிப்புக் குழுவை அறிமுகம் செய்தது ஜோகூர் பாரு!

544
0
SHARE
Ad

State-by-State-Johorஜோகூர் பாரு, ஜூன் 30 – பொது இடத்தில் குப்பை போடுவதைத் தடுக்க, ஜோகூர் பாரு நகர சபை, மலேசியாவிலேயே முதல் குப்பை ஒழிப்புக் குழுவை உருவாக்கியுள்ளது.

நகரத்தின் முக்கியப் பகுதிகளில் 6 பேர் கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் நகரப்பகுதிகள் குப்பையின்றி, சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பார்கள் என மேயர் டத்தோ அப்துல் ரஹ்மான் மொஹமட் டேவாம் தெரிவித்துள்ளார்.

ஜேபி பசார், ஜேபி செண்ட்ரல், லார்கின் செண்ட்ரல் பேருந்து நிலையம் மற்றும் ஜாலான் வோங் ஆல் ஃபூக் ஆகிய முக்கிய இடங்களில் குப்பைக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்த்து பொது இடங்களில் போடுவதைக் கண்காணிப்பாளர்கள் பார்த்தால், உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களாக இருந்தால் 20 ரிங்கிட் அபராதமும், இளைஞர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளாக இருந்தால் 50 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அப்துல் ரஹ்மான் மொஹமட் டேவாம் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அறிவித்துள்ளார்.