Home இந்தியா என்னை அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் மக்களுக்கு நன்றி – ஜெயலலிதா!

என்னை அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் மக்களுக்கு நன்றி – ஜெயலலிதா!

511
0
SHARE
Ad

30-1435650088-jayalalitha767சென்னை, ஜூன் 30 – ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தன்னைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயிருப்பதாவது;-

#TamilSchoolmychoice

“ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் என்னைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

“ஆர்.கே. நகர் வாக்காளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவேன். வாக்காள பெருமக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்பப் பாடுபடுவேன்”.

“நான் வெற்றி பெறப் பாடுபட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

“2016-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.