பதிவான வாக்குகளில் 88.43 சதவீதம் வாக்குகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளது, இந்திய அளவில் மிகப் பெரும் சாதனையாகும்.
தனக்குப் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஜெயலலிதா தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பணியாற்றிய கழக உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன் பிறப்புகளுக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், தம் மீது நம்பிக்கை வைத்து வெற்றியைத் தேடித் தந்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்மைகள் செய்வேன்; அவர்களின் முன்னேற்றங்களுக்குப் பாடுபடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
Comments