இந்த செய்தியை நடிகர் ஆர்யா மறுத்துள்ளார். அத்துடன் மகிழ்திருமேனி என்பவர் யார்? எனவும் கேள்வி கேட்டிருக்கிறார்.
மகிழ்திருமேனி படத்தில் நான் நடிப்பதாக சொல்வதில் உண்மையில்லை. தயாரிப்பாளர் ஒருவர் புதுப்படம் பற்றி என்னிடம் பேசினார். ஆனால், அது யாருடைய படம் என்பது தெரியவில்லை. மகிழ்திருமேனி என்பவரை எனக்கு யார் என்றே தெரியாது. அவரிடம் கதை கேட்க நேரம் ஒதுக்கியிருப்பதாக சொல்வதுகூட புரளிதான்.
இப்போதைக்கு நடித்து வரும் படங்களுக்கு தேதி கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படியெல்லாம் ஏன் புரளியை கிளப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.