கோலாலம்பூர், ஜூலை 19 – உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச் 17 விமானத்தில் 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியது.
ஆனால், மாஸ் வெளியிட்ட முந்தைய அறிக்கையில், 280 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 295 பயணிகள் இருந்ததாக தெரிவித்திருந்தது.
அப்படியென்றால், 3 குழந்தைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவறான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
283 பயணிகளில், நெதர்லாந்து 154, மலேசியா 43 (15 பணியாளர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட), ஆஸ்திரேலியா 27, இந்தோனேசியா 12 (ஒரு குழந்தை உட்பட), பிரிட்டன் 9, ஜெர்மன் 4, பெல்ஜியன் 4, பிலிப்பைன்ஸ் 3 மற்றும் கனடா 1 ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
எனினும், 41 பயணிகள் யார் என்று இன்னும் அறியப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் உறவினர்களுக்கு முழு ஒத்துழைப்பையும், உதவியையும் வழங்குவதே தங்களது தற்போதைய நோக்கம் என்று தெரிவித்துள்ளது.