Home தொழில் நுட்பம் ‘ஐமெஸ்ஸேஜ்’ மூலம் ஐபோன்களுக்குள் ஊடுருவும் புதிய பக் – எச்சரிக்கை!

‘ஐமெஸ்ஸேஜ்’ மூலம் ஐபோன்களுக்குள் ஊடுருவும் புதிய பக் – எச்சரிக்கை!

825
0
SHARE
Ad

imessageகோலாலம்பூர், மே 28 – ‘ஐமெஸ்ஸேஜ்’ (iMessage) மூலம் ஊடுருவும் புதிய ‘பக்’ (Bug) ஐபோன்களை செயலிழக்கச் செய்வதாக சமீபத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. இந்த புதிய பக் பற்றிய செய்திகளை ஆப்பிள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் ‘ரெட்டிட்’ (Reddit) பயனர்கள் பலர் தங்கள் வலைப்பதிவில், “கடந்த சில நாட்களாக ஐபோன்களில் புதிய பக்குகள், ஐமெஸ்ஸேஜ் சேவை வழியாக ஊடுருவுகின்றன. இவை ஐபோன்களை செயல் இழக்கச் செய்கின்றன. அரபு மொழியில் சில வாசகங்களைக் கொண்டிருக்கும் அந்த குறுந்தகவலை திறந்தவுடன் ஐபோன்கள் செயல் இழக்கின்றன” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் இதுபற்றி கூறுகையில், “ஐமெஸ்ஸேஜ் மூலம் ஊடுருவும் பக் பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் இதற்காக புதிய மேம்பாடுகள் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே ஐபோன் பயனர்கள் தங்கள் ஐமெஸ்ஸேஜ் செட்டிங்ஸில் ‘நோடிஃபிகேஷன்’ (Notification)-ஐ முடக்கினால் இந்த பக்குகளில் இருந்து ஐபோன்களை காத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன்கள் செயல் இழப்பதை கீழே உள்ள காணொளியில் காண்க:

https://www.youtube.com/watch?v=_k7Z7Xo05L8