Home உலகம் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 20,000 மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 20,000 மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

486
0
SHARE
Ad

Germany1பெர்லின், மே 28 – ஜெர்மனியின் மேற்கு நகரமான கொலோனில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததனால் அதனை செயல் இழக்கச் செய்யும் முன் அந்தப்பகுதியில் இருந்த 20000 மக்களை ஜெர்மன் அரசு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியது.

கடந்த வெள்ளிக்கிழமை கொலோன் நகரில் கட்டுமானப் பணிகளின் போது 5 மீட்டர் ஆழத்தில் பெரிய அளவிலான வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அந்த வெடிகுண்டை பரிசோதனை செய்த நிபுணர்கள், அது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு என்றும் அது வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 20,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் நேற்று அந்த வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது.