Home Featured உலகம் மெக்கா புனித மசூதியில் கிரேன் விழுந்து 107 பேர் பலி!

மெக்கா புனித மசூதியில் கிரேன் விழுந்து 107 பேர் பலி!

832
0
SHARE
Ad

mecca-mosque-மெக்கா – இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மஸ்ஜித் அல்-ஹராம் என்ற மசூதியில், நேற்று கட்டிட வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில், 238 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது குறித்து சவூதி பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், “மஸ்ஜித் அல்-ஹராம் மசூதியில் கிரேன் விழுந்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

mecca-crane-collapseகிரேன் விழுந்த சமயம் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது. மேலும், கிரேன் விழுந்ததன் எதிரொலியாக மெக்காவைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியிகளில் இருக்கும் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்துள்ளன. அந்த அளவிற்கு இந்த விபத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “கிரேன் விழுந்த தருணம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், அதே சமயத்தில் இந்த விபத்து 4 மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்து இருந்தால், கண்டிப்பாக பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி இருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடி, இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருந்தனர். அது மிகப் பெரிய துயரமாக அமைந்து இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

mecca1மஸ்ஜித் அல்-ஹராம் மசூதியில் இது போன்ற சம்பவங்கள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தொழுகையின் போது லட்சக்கணக்கானவர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 363 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 1990-ம் ஆண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி 1,426 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.