Home உலகம் அன்வார், துருக்கி சென்றடைந்தார் – அதிபருடன் சந்திப்பு

அன்வார், துருக்கி சென்றடைந்தார் – அதிபருடன் சந்திப்பு

574
0
SHARE
Ad

இஸ்தான்புல்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வருகையின் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) துருக்கி வந்தடைந்தார்.

முன்னதாக துருக்கிய நிதியமைச்சர் மெஹ்மெட் சிம்செக் அவர்களுடன் அன்வார் பேச்சு வார்த்தை நடத்தினார். அன்வாருடன் வெளியுறவு அமைச்சர் சாம்ரி அப்துல் காதிரும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார்.

துருக்கிய நிதியமைச்சர் மெஹ்மெட்டுடன்

இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் உக்கிரமடைந்திருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க வருகை தந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பாலஸ்தீன பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, அங்குள்ள மக்களுக்கு உதவுவது ஆகிய அம்சங்களின் அடிப்படையில் அன்வார் தன் குழுவினருடன் வருகை மேற்கொண்டிருக்கிறார்.

துருக்கிக்கு வருகை தருவதற்கு முன்பாக, தன் வருகையின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் அடுத்த ஆட்சியை ஏற்கப் போகும் இளவரசரும், பிரதமருமான முகமட் பின் சல்மானை அன்வார் ரியாத் நகர் அரண்மணையில் சந்தித்தார்.