Home Featured கலையுலகம் நீதித்துறை கெட்டுப் போனால் நாடு முன்னேறாது: ரஜினிகாந்த்

நீதித்துறை கெட்டுப் போனால் நாடு முன்னேறாது: ரஜினிகாந்த்

746
0
SHARE
Ad

rajiniசென்னை- நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேற்றம் காணாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அவர் தெரிவித்துள்ள இக்கருத்து சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்தியா எப்போதுமே நீதித்துறையைத்தான் நம்பியுள்ளது. அரசியல்வாதிகள் நினைத்தால் மக்களை மாற்றிவிடலாம். அரசியல்வாதிகள் கெட்டுப் போனாலும், மக்கள் கெட்டுப் போனாலும் கூட நாடு உருப்படும். ஆனால் நீதிமன்றங்கள் கெட்டுப் போனால் நாடு நன்றாக இருக்காது” என்றார் ரஜனிகாந்த்.

karunanithi

இந்நிலையில் ரஜினியின் இக்கருத்தை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். சரியான நேரத்தில் ரஜினிகாந்த் வெளிப்படையாக மனம் திறந்து சொல்லியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரஜினி பேச்சு ஆழமான அர்த்தச்செறிவான பேச்சு என்றும், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சு என்றும் அவர் பாராட்டி உள்ளார்.

“அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறைக் கருத்துக்கள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வளர்ந்து வருகிறது. இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.”

“இந்நிலையில் ரஜினி வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் கருத்து, ஜனநாயகத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கதே ஆகும்” என்று கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.