Home Featured நாடு என்ன ஆனது சரவணனுக்கு? – அன்வார் கேள்வி!

என்ன ஆனது சரவணனுக்கு? – அன்வார் கேள்வி!

922
0
SHARE
Ad

ANWAR IBRAHIM_INTERVIEWகோலாலம்பூர் – மலேசிய ஐக்கிய இந்தியக் கட்சியின் தலைவர் எஸ்.நல்லக்கருப்பனுக்கு எதிராக தான் தொடுத்திருந்த 100 மில்லியன் அவதூறு வழக்கிற்காக இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வந்த எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், விசாரணைக்காகக் காத்திருந்த நேரத்தில் நாட்டின் நடப்பு அரசியல் நிலவரங்களை தனது மனைவி வான் அசிசா மற்றும் ரபிசி உள்ளிட்ட பிகேஆர் கட்சியினரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

மஇகா தேர்தல் நிலவரம் குறித்தும், டத்தோ சரவணன் குறித்தும் அவர் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு, “என்ன ஆனது சரவணனுக்கு?” என்று கேட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மஇகா மறுதேர்தலில், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியிடம், டத்தோ சரவணன் தோல்வியுற்றதாக அவர்கள் அன்வாரிடம் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, 1எம்டிபி விவகாரம் உள்ளிட்ட பல தகவல்களையும் கேட்டு அறிந்து கொண்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.