Home இந்தியா கும்ப மேளா! – நிறைவடைந்தது!

கும்ப மேளா! – நிறைவடைந்தது!

892
0
SHARE
Ad

kumbha-melaமார்ச்.13- இந்தியாவின் முக்கிய விழாவான கும்பமேளா, இரண்டு விதங்களில் நடக்கிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது சிம்ம ஹஸ்த கும்ப மேளா. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா.

இந்துக்களின் புனிதமான திருவிழாக்களுள் ஒன்றான இந்த கும்பமேளா நாசிக், அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி ஆகிய நான்கு இடங்களிலும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் கொண்டா டப்படுகிறது.

இவ்விழாவின் புராண வரலாறு :-

#TamilSchoolmychoice

‘கிடைக்கும் அமுதத்தை இருதரப்பினரும் பங்கிட்டுக்கொள்வது’ என்ற உடன் பாட்டுடன் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர்.

மத்தாக மந்தரமலை, கயிறாக வாசுகி பாம்பு, அதன் வாய்ப் பக்கம் அசுரர்கள், வால் பக்கம் தேவர்கள் என்று பாற்கடலைக் கடைந்தனர். அப்போது தன்வந்திரி ஏந்தி வர, அமிர்தக் கலசம் வெளிப்பட்டது.

இந்திரன் மகன் ஜயந்தன் விரைந்து வந்து அமிர்தக் கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடினான். அசுரர்கள் அவனைத் துரத்தினர்.

பூமியிலும் விண்ணுலகிலும் மாறி மாறி 12 நாட்கள் தினம் தினம் ஒரு இடமாக கலசத்தை வைத்து எடுத்து சென்றான் ஜயந்தன். அந்த இடங்களில் அமிர்தத் துளிகள் தரையில் சிந்தின.

தேவலோகத்தில் எட்டு இடங்களிலும்,பாரதத்தில் ஹரித்வார், பிரயாகை, நாசிக், உஜ்ஜயினி ஆகிய நான்கு இடங்களிலும் அமிர்தத்துளிகள் விழுந்தன. இந்த நான்கு இடங்களுக்கும் பக்தர்கள் வந்து புனித நீராடினால் தேவர்களும், அசுரர்களும் கடைந்தெடுத்த அமிர்தம் அருந்திய பலன் நமக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது புண்ணியத்தை அளிப்பதுடன் உடல் நோய்களிலிருந்தும் நிவாரணம் தரும்.

மேலும் இந்த நகரங்களில் நீராடினால் 60 ஆயிரம் வருடங்கள் புனித கங்கையில் நீராடிய புண்ணியத்துக்கு ஒப்பானது என்று புராணங்கள் கூறுகின்றன.

ஹரித்வாரில் நடக்கும் இந்த விழாவுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி, அங்குள்ள கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவார்கள்.