Home உலகம் போப்பாண்டவர் தேர்தல்- முதல் ஓட்டெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை

போப்பாண்டவர் தேர்தல்- முதல் ஓட்டெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை

608
0
SHARE
Ad

popeவாடிகன், மார்ச்.13- புதிய போப்பாண்டவரைத் தேர்வு செய்வதற்கான முதல் ஓட்டுப்பதிவு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வாடிகன் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் இருந்து கரும்புகை வெளியானது.

இதன் மூலம் முதல் ஓட்டெடுப்பில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நாள்தோறும் இருமுறை இத்தகைய ஓட்டுப்பதிவு நடைபெறும்.

#TamilSchoolmychoice

போப்பாண்டவர் தேர்தல்

புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள 115 ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் வாடிகன் நகரில் கூடியுள்ளனர்.

போப் பதினாறாம் பெனடிக்ட் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய போப்பாண்டவரைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவர்களில் ஒருவரை போப்பாக தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை துவங்கியது. இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்டினல்களின் ஆதரவு கிடைக்கும் வரை இந்த தேர்தல் நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓட்டெடுப்பில் புதிய போப் தேர்வு செய்யப்படாததால் அடுத்த ஓட்டுப்பதிவு புதன்கிழமை அன்று காலை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஓட்டெடுப்பின் முடிவிலும் புகை வெளியேற்றப்படும்.

புகை அடையாளம்

போப் தேர்தல் நடத்தை விதிகளின் படி கார்டினல்களின் வெளி உலக தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் ஓட்டுச்சீட்டுகள் எரிக்கப்படும்.

ஓட்டுச்சீட்டுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையை கொண்டே புதிய போப் தேர்வு செய்யப்பட்டாரா இல்லையாஎனஅறிந்து கொள்ள வெளியில் ஆவலுடன் காத்திருக்கும் மக்கள் அறிந்து கொள்வர்.

இதன்படி கரும்புகை வந்தால் இன்னும் தேர்வு செய்யப்பட வில்லை என்றும் வெண்புகை வந்தால் தேர்வு செய்யப்பட்டதாக அறிந்து கொள்வர்.

தேர்வு செய்பவர்கள் யார்?

காலையில் கார்டினல்கள் ஒன்றிணைந்து சிறப்பு பிரார்த்தனை நடத்துவர். அதன் பின்னர் மூத்த கார்டினலை தொடர்ந்து மற்ற கார்டினல்கள் ஓட்டளிப்பார்கள்.

புதிய போப்பை தேர்வு செய்யும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளும் கார்டினல்களில் 80 வயதுக்கு கீழ் இருப்பவர்களே ஓட்டளிக்கும் தகுதி உள்ளவர் ஆவார்.

ரகசியமான முறையில் நடத்தப்படும் இந்த தேர்வில் மற்றவர்கள் பங்கேற்க இயலாது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் புதிய போப்பாண்டவர் உலகம் முழுவதிலும் உள்ள 1.2 பில்லியன் ரோமன் கத்‌தோலிக்கர்களின் ஆன்மிக தலைவராக விளங்குவார்.