Home Featured நாடு கோத்தா கினபாலு மலையேற்றம் மீண்டும் துவக்கம்!

கோத்தா கினபாலு மலையேற்றம் மீண்டும் துவக்கம்!

974
0
SHARE
Ad

Mt-Kinabalu-Summitகோத்தா கினபாலு – 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அபாயகரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோத்தா கினபாலு மலையேற்றம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

முதல் குழுவில் சுமார் 135 மலையேற்ற வீரர்கள், புதிய ரணாவ் மலையேற்றப் பாதையைப் பயன்படுத்தி 4095.2 மீட்டர் உச்சியான லோவ்ஸ் பீக்கை அடைந்தனர்.

அவர்களுக்கு நேற்று மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ மசிடி மஞ்சுன், டிம்போனான் கேட் அருகே கொடி அசைத்து வரவேற்பு அளித்தார்.

#TamilSchoolmychoice

முதல் குழுவில் 53 வெளிநாட்டவர்களும், மற்றவர்கள் அனைவரும் மலேசியர்களும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.