Home Featured தமிழ் நாடு சென்னைக்காக கூகுளும் களமிறங்கியது!

சென்னைக்காக கூகுளும் களமிறங்கியது!

771
0
SHARE
Ad

googleசென்னை – சென்னை முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கைப் பேரழிவுகள் குறித்து அவசர கால தகவல்களை வெளியிடும் ‘க்ரைசிஸ் ரெஸ்பான்ஸ்‘ (Crisis Response) பக்கத்தை கூகுள் திறந்துள்ளது. இந்த பக்கத்தின் மூலம் சென்னையின் நிலவரத்தையும், அவசர கால உதவிகள் வழங்கப்படும் வழிமுறைகள் மற்றும் இயற்கைச் பேரிடர் சார்ந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும், பாதிக்கப்பட்டவர்கள் தேவையான உதவிகளை பெறவும் முடியும்.

கூகுள் மட்டுமல்லாது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்கள் மூலமாகவும் தேவையான தகவல்கள் உடனுக்குடன் பெறப்படுகிறது. குறிப்பாக டுவிட்டரில் #ChennaiRainsHelp என்ற டேக்-ஐ கிளிக் செய்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைய ஆயிரம் வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே வாட்சாப்பில் சென்னை வெள்ளம் குறித்து பல தேவையில்லாத தகவல்களும் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கருதி அதுபோன்ற தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.