Home Featured உலகம் 2015-ல் 157 பேர் தலையை வாங்கிய சவுதி அரேபியா – தண்டனைகளின் நாடு என விமர்சனம்!

2015-ல் 157 பேர் தலையை வாங்கிய சவுதி அரேபியா – தண்டனைகளின் நாடு என விமர்சனம்!

859
0
SHARE
Ad

saudi2ரியாத் – சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டில், பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 157 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது. கடந்த இருபது வருடங்களில் இவ்வளவு எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். சவுதியின் இத்தகைய நடவடிக்கை உலக அளவில் மனித உரிமை அமைப்புகளிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திட்டமிட்டுக் கொலை செய்து அதன் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஷரியா சட்டப்படி மரண தண்டனை வழங்கப்படுவது அங்கு காலம் காலமாக நடைமுறையில் இருந்தாலும், போதை மருந்து கடத்தல் போன்ற ஆயுதமற்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இஸ்லாத்தின் பேரில் தண்டனை வழங்கப்படுவதை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவென்றால், 2015-ல் தீவிரவாதம் மற்றும் கொலைக் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் செய்ததற்காக சுமார் 62 பேருக்கு மரணம் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலும் மரண தண்டனைகளை பொது வெளியில் மக்கள் முன்னிலையில் நடத்துவதால், மனித உரிமை அமைப்புகள், சவுதி அரசின் தண்டனைகளுக்கும், ஐஎஸ் இயக்கத்தின் தண்டனைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று விமர்சித்துள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள சவுதி வெளியுறவுத் துறை, தங்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் விமர்சித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.