Home Featured வணிகம் மாஸ் இஸ்லாமிய பெண் பணியாளர்கள் பர்தா அணிய வேண்டும்: பெர்லிஸ் முப்தி வலியுறுத்தல்! 

மாஸ் இஸ்லாமிய பெண் பணியாளர்கள் பர்தா அணிய வேண்டும்: பெர்லிஸ் முப்தி வலியுறுத்தல்! 

506
0
SHARE
Ad

mas1கோலாலம்பூர் – மலேசிய ஏர்லைன்சில் பணியாற்றும் இஸ்லாமிய பெண் பணியாளர்கள், பர்தா அணிந்து பணி செய்வதற்கு அந்நிறுவனம் அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்கள், விமானத்தில் மது பரிமாறுவதற்கு மாஸ் அனுமதிக்கக் கூடாது. இந்த விசயத்தில் அரசு, மாஸ் நிறுவனத்தை நிர்பந்திக்க வேண்டும் என பெர்லிஸ் முப்தி டாக்டர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் வலியுறுத்தி உள்ளார்.

மாசில் பணியாற்றும் பல்வேறு இஸ்லாமிய பெண் பணியாளர்கள், தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தன்னை தொடர்பு கொண்டு கோரிக்கை வைப்பதாகவும், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியா, இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “மாஸ் நிறுவனம், தங்களது விமானத்தில் மது பரிமாறுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். பல்வேறு விமான நிறுவனங்கள், மது சேவையை நிறுத்தி உள்ளன. நாம் மட்டும் அதனை ஏன் செய்ய வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.